இயக்குனர் பாலா எப்போதும் தொடர்ந்து தரமான படங்களை தான் கொடுப்பவர். இவர் பாதையில் இருந்து சற்று விலகி எடுத்தப்படம் அவன் இவன்.
தற்போது முற்றிலும் இவருடைய ஸ்டைலில் இல்லாமல், பிரமாண்ட ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கின்றாராம்.
இப்படத்தில் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி என 5 ஹீரோக்கள் நடிக்கவிருக்கிறார்களாம். இச்செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.