இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் 50 வினாடிகள் டீசர்
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக
ஒரு தமிழ்ப்படத்தின் டீசரை வைத்தே அந்த படத்தின் கதை இதுதான் என ரசிகர்கள்
ஓரளவுக்கு யூகித்து வரும் நிலையில் 'தெறி' படத்தின் டீசரை வைத்து படத்தின்
கதையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என படக்குழுவினர் மறைமுகமாக சவால்
விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த டீசரில் விஜய்யின் மூன்று வித்தியாசமான தோற்றங்களும் மற்றும் ஒருசில
முக்கிய காட்சிகளும் அடங்கி இருப்பதாக கூறப்படினும், இந்த காட்சிகளை வைத்து
தீவிர விஜய் ரசிகர்களால் கூட இந்த படத்தின் கதையை யூகிக்க முடியாது என்று
கூறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டீசர் வெளிவந்தவுடன் படக்குழுவினர்
கூறியது உண்மையா? அல்லது ரசிகர்கள் படத்தின் கதையை யூகம் செய்யும்
அளவுக்கு டீசர் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர்
நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்காக
இசையமைத்த பாடல்கள் வெளியாகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என
கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்களுக்கு சவால் விடும் 'தெறி' டீசர்
Tamil News
,
Theri
,
Vijay
Edit