தெறி வியாபாரம் ஆகலையாம்!! புலி படத்தின் எதிரொலி!!
News
,
Tamil
,
Tamil News
,
Theri
Edit
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கபாலி, தெறி என இரண்டு பிரம்மாண்டமான படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது.இதில் ரஜினியின் கபாலி படத்தின் US விற்பனை 8 கோடிக்கு சினி கேலக்சி வாங்கியிருக்கிறது என்று தாணுவே கூறினார்.ஆனால் முதலில் ரிலீசாகவிருக்கும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இன்னும் வியாபாரம் ஆகவில்லையாம், 4 கோடிக்கு மேல் யாரும் கேட்கதாததால் தாணுவும் விற்பனையை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறாராம்.
இதற்கு முக்கிய காரணம் சென்ற வருடம் வெளியான புலி என்ற மாபெரும் தோல்வி படம்தான்.புலியை பார்த்த பல விநியோகஸ்தர்கள் விஜய் இப்படி ரிஸ்க் எடுத்து நம்ம எல்லாருக்கும் ரஸ்க் குடுத்துட்டாரே என்று தலையில் அடிக்காத குறையாக புலம்பி தள்ளிவிட்டார்கள்.படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் இருவரும் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் விநியோகஸ்தர்கள் நிலை அதோ கதியானதுதான் தெறி வியாபாரத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள்.
பிப்ரவரி 5ம் தேதி தெறி டீசர் வெளியாவதால் அதுவரை படத்தின் பிசினஸ் பற்றி எதுவும் முடிவெடுக்க வேண்டாம் என அமைதியாக இருக்கிறாராம் தாணு.