கோலிவுட் திரையுலகில் சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்கள்
பட்டியலில் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் படம் எப்போது வரும் என
இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். நல்ல கதை அமைந்தால் இருவரும்
இணைந்து நடிக்க தயார் என சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஏற்கனவே பல
பேட்டிகளில் கூறி வந்த நிலையில் தற்போது சூர்யா நடித்து வரும் 'S3'படத்தில்
கார்த்தி ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாக கூறப்படுகிறது.
S3 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்
இந்த படத்தின் ஒரு பாடலில் சூர்யா, கார்த்தி, அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன்
ஆகியோர் நடனம் ஆடவுள்ளதாகவும், இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில்
நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் இருந்து
கிடைக்கும் வரவேற்பை அடுத்து இருவரும் இணைந்து நடிப்பது குறித்து முடிவு
செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ஆயுத எழுத்து' படத்திற்கு
கார்த்தி உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.