சிம்புவின்
பீப் சாங் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவை மாதர் சங்கம் புகார் கொடுத்துள்ளது.
இதனால் சிம்பு-அனிருத் மீது பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து இன்று அல்லது நாளையே சிம்பு மீது விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.