இளைய தளபதி விஜய் எப்போதும் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட எமி, விஜய்யுடம் பேச கொஞ்சம் தயங்கினாராம். ஆனால், விஜய் மிக எளிமையாக அவரிடம் பழகினாராம்.
மேலும், மிகவும் அன்பாகவும் நடந்து கொண்டாராம். தற்போது விஜய் புராணம் தான் செல்லும் இடத்தில் எல்லாம் பாடுகிறாராம் எமி.