அஜித் என்றாலே அது மாஸ் மற்றும் மசாலா படமாகத்தான் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வேதாளம் முற்றிலும் பழைய படங்களைவிட மாறுபட்டு காணப்படுகிறது.
வேதாளம் படம் தொடக்கத்தில் கொஞ்சம் மெத்தனமாக செல்கிறது. அதுவும் தேவையில்லாத காட்சிகள் வைத்து ஆரம்பத்திலேயே கொட்டாவி வரவைக்கிறார் இயக்குநர் சிவா.
அதன்பின் சிறிது சிறிதாக கதைக்குள் நுழைந்தவுடன் அதிர்ச்சி திருப்பங்கள் மற்றும் திருப்பங்கள் என படம் வேகமாக நகர தொடங்குகிறது.
அட்டகாசம் படத்திற்கு பிறகு இப்படத்தில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். வில்லன்களுடன் அஜித் மோதும் காட்சியில் கண்டிப்பாக திரையரங்கில் விசில் மற்றும் கைத்தட்டல்கள் வெடிக்கப்போவது உறுதி. முக்கியமாக இண்டர்வெல் காட்சியும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் திருப்பங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு தானாகவே இழுத்துவிடுகிறார் இயக்குநர்.
சில காட்சிகள் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும்படி இருக்கிறது. அஜித் யார் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்னொரு கும்பல் அஜித்தை அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டேயிருக்க படம் பார்க்கும் ரசிகனே டென்ஷன் ஆகும் அளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறது.
இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் அஜித்தாக நம்மை மிரள வைத்திருக்கிறார்.
ஆனால் பெரும்பாலான நேரங்களில் அந்த செண்டிமெண்ட் நம் மனதை தொடவே யோசிக்கிறது ஏன் சார் (இயக்குநர் சிவாவிடம்)... கதைக்கு ஏற்ற வேகத்தை இரண்டாம் பாதியில் காட்டியிக்கிறார்கள். அஜித் பேசும் வசனங்களும் அவரின் அதிரடி ஆகஷனும் படத்தை அடுத்த பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இணைப்பது உறுதி.
அஜித் இப்படத்திலும் அவரது கடின உழைப்பை போட்டு முழு ஆர்வத்துடன் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பது திரையில் நன்றாகவே தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த சைக்கோ கதபாத்திரத்தில் நம்மை அஜித் மிரட்டுவது உறுதி. அதன்பின் சில செண்டிமெண்ட் காட்சியில் நம் தொண்டை கனமாகிறது.
ஸ்ருதிஹாசன் படத்திற்கு ஒரு அழகு தேவதை தேவை என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் படத்தில் ஒரு முக்கியமான காட்சி திருப்பத்திற்கு காரணமாக அமைகிறார் ஸ்ருதிஹாசன். லட்சுமி மேனனும் அவருடைய பங்கிற்கு திறமையை வெளிபடுத்தியிருக்கிறார்.
இசை அனிருத் - அஜித்தின் அறிமுக காட்சியில் வரும் பின்னணி இசை மற்றும் வில்லனின் எண்ட்ரி என காது கிழிந்து நம் நரம்பை தேடிபித்து தட்டி எழுப்புகிறார். பாடல்களில் ஆலுமா டோலுமா மாஸ் மசாலா சாங் ஆஃப் தி இயர் என்று பெயர் எடுப்பது உறுதி.
பலம் :-
தல
ஆக்ஷன் சண்டை காட்சிகள்
சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லிங்
வசனங்கள்
திரைக்கதை
பலவீனம்:-
தேவையில்லாத ஆரம்ப காட்சிகள் - திணிக்கப்பட்டது போல உள்ளது.
சில காட்சிகள் படத்திற்கே சம்பந்தமில்லாத மாதிரி தெரிகிறது
பார்த்து பழகிய கதையை பாலீஷ் செய்து புதுவிதமாக கொடுத்திருப்பது
மொத்தத்தில் வேதாளம் இந்த வருட வசூல் சாதனை பட்டியலில் நிச்சயம் இடம்பெறும். அதற்கான மொத்த கலவையும் படத்தில் இருக்கிறது. இந்த தீபாவளி தல தீபாவளியாக இருப்பது உறுதி
Rating 3.5/5