புலி
தடைகளை தாண்டி சரித்திரம் படைப்பவர் தான் தளபதி போல. முதன் முறையாக இளைய தளபதி விஜய் தன் மாஸ் மசாலாவை தள்ளி வைத்துவிட்டு, இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ, மக்களுக்கு எது பொழுதுபோக்கு என்று தெரிந்து வைத்துக்கொண்டு சிம்புதேவன் கையில் சாட்டையை கொடுத்து சுழட்ட சொல்லியிருக்கிறார்.
விஜய் போல் விண்ணைத்தொடும் சக்தி படத்தில் இருக்க, அதில் ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி, ஹன்சிகா என பிரமாண்ட நட்சத்திரக்கூட்டணியுடன் களம் இறங்கியிருக்கின்றது
கதைக்களம்
பேண்டஸி கதை என்பதால் எந்த காலம் என்று தான் குறிப்பிடவில்லை, ஆனால், அழகிய தேசத்தில் கர்ணன் ஸ்டைலில் ஆற்றில் ஒரு குழந்தை குருவி முட்டையுடன் மிதந்து வருகின்றது. அந்த குழந்தையை பிரபு எடுத்து வளர்க்கிறார். அமைதியாக இருக்கும் அவர்கள் கிராமத்தில் வேதாள உலகத்தை சார்ந்த வேதாளங்கள் அவ்வப்போது வந்து மிரட்டுகின்றது.
வேதாள உலகத்தில் ராணி ஸ்ரீதேவி, தளபதி சுதீப்பின் மாய வலையில் நாட்டை கொடூரமாக ஆள்கின்றார். ஒருநாள் விஜய்யின் காதல் மனைவி ஸ்ருதிஹாசனை வேதாள உலகத்தினர் கடத்தி செல்ல, விஜய் அவரை தேடி போகின்றார்.
அங்கு செல்ல வேண்டும் என்றால் நீயும் வேதாளமாக தான் இருக்க வேண்டும் என ஒரு மந்திர பாணத்தை குடித்துவிட்டு 8 நிமிடம் மட்டும் வேதாளமாக மாறும் திறன் கொண்டு அந்த வேதாள கோட்டையை அடைகின்றார். அதன் பிறகு பல டுவிஸ்டுகள் அவிழ, தன் காதல் மனைவி ஸ்ருதியை கண்டுப்பிடித்தாரா? நாட்டை சுதீப்பிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை ஒரு மாய உலகத்திற்கு நம்மை அழைத்து சென்று காட்டுகின்றது இந்த புலி.
படத்தை பற்றிய அலசல்
இளைய தளபதி விஜய் ஒவ்வொரு காட்சிகளிலும் ஆட்டம், பாட்டம், துறுதுறு நடிப்பு என கலக்கியுள்ளார். பிரபு கொஞ்சம் நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். ஹன்சிகா, ஸ்ருதி வெறும் கவர்ச்சிக்கு மட்டும் தான் போல, நடிப்பில் எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை.
இதுவரை ஹாலிவுட் படங்களை மட்டும் மெய் மறந்து பார்த்த நம்மூர் மக்களுக்கு ராட்சஸ மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் குருவி, ஆமை என சிம்புதேவன் காட்சிக்கு காட்சி விருந்து வைத்துள்ளார். அதிலும் ஆமை வேதாளக்கோட்டைக்கு வழி சொல்லி, அதன் படி அவர்கள் செய்யும் காரியங்கள் குழந்தைகளுக்கு செம்ம ஜாலி ரைட் தான்.
படத்தின் வசனம் ‘எனக்கு ராணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாரோ இடையில் ஏற்றி விடுகிறார்கள், நான் அரசப்பதவியில் இருந்தாலும் உங்களில் ஒருவன்’ என ரியல் லைப் வசனமாக இருக்குமோ என்று கேட்கத்தோன்றுகின்றது. நட்ராஜ் ஒளிப்பதிவு பேண்டஸி படம் என்பதால் முடிந்து அளவிற்கு உழைத்திருக்கிறார். ஆனால், கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, சத்யன், வித்யூலேகா என பலரும் தங்கள் கதாபாத்திரங்களில் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர். ஸ்ரீதேவி இத்தனை வருடத்திற்கு பிறகு தமிழில் கலக்க வருகிறார், சுதீப் மிரட்டுவார் என எதிர்ப்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. ஏனெனில் விஜய்யை மீறி இன்னொரு பெரிய நடிகர், நடிகை என்பது தமிழ் நாட்டிற்கு சாத்தியம் இல்லை.
க்ளாப்ஸ்
விஜய் தேர்ந்தெடுத்த கதைக்களம், ஏதோ மாய மந்திரம் கதை படித்தார் போல் உள்ளது. குள்ள மனிதர்கள் வரும் காட்சி, வேதாளக்கோட்டைக்கு வழி தேடி செல்லும் காட்சி, தன்னை வேதாளம் என நிரூபிக்க விஜய் வரும் சோதனை காட்சி என அனைத்தும் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கும்படி உள்ளது.
இதையெல்லாம் விட இரண்டாம் பாதியில் வரும் அப்பா விஜய்யின் கம்பீர நடிப்பு. ஒரு சில காட்சிகள் என்றாலும் மிரட்டியுள்ளார்.
பல்ப்ஸ்
நல்ல கதை, திரைக்கதை இருந்தும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அப்பட்டமாக பல இடங்களில் தெரிகின்றது. ஆனால் குறுகிய நாட்களில் இந்த அளவிற்கு செய்ததே பெரிய விஷயம் என்றாலும், கொஞ்சம் தத்ரூபமாக இருந்திருக்கலாம். விஜய்யை மீறி வேறு யாரும் பெரிய அளவில் கவரவில்லை. அதிலும் நந்திதா தான் ஆமாம் படத்தில் இருக்கிறார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது.
இவர்களை எல்லாம் விட DSPயின் இசை ஏன் சார் இப்படி சோதிச்சுட்டீங்க... விஜய் படம் என்றால் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்.
மொத்தத்தில் புலி ரசிகர்களை சற்று சோதனை செய்துள்ளது