வசூலில் புலியை பின் தள்ளிய என்னை அறிந்தால்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை எப்போதும் தீராத போட்டி விஜய், அஜித்திற்கும் தான். ரஜினி, கமல் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு பல மேடைகளில் தங்கள் நட்பை நிரூபித்து விட்டனர்.
ஆனால், விஜய், அஜித் நல்ல நண்பர்கள் தான் என்றாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு இடையே பெரும் சண்டையை உருவாக்குகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு விஜய்யின் புலி, அஜித்தின் என்னை அறிந்தால் என இருவரின் படங்களும் ரிலிஸ் ஆகியுள்ளது. இதில் எந்த படம் முன்னிலை என்பது இதோ உங்களுக்காக..
தமிழகத்தில் எப்போதும் சென்னை வசூல் மிகவும் முக்கியம், ஏனெனில் எண்ணிலடங்கா மலடிப்ளக்‌ஷ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் என கலை கட்டும். அந்த வகையில் சென்னையில் விஜய்யின் புலி படம் 3 வார முடிவில் ரூ 5.02 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் வெளிவருவதற்கு சந்தித்த பிரச்சனை, சமூக வலைத்தள கிண்டல்கள் இதனாலேயே இப்படத்தின் வசூல் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இதே 3 வாரத்தில் ரூ 5.71 கோடி வசூல் செய்தது, இதை வைத்து பார்க்கையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் விஜய்யை முந்தியுள்ளார் அஜித்.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.