அடக்க முடியாமல் திணறும் புலி படக்குழுவினர்...............

சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்யை கலாய்ப்பதே எங்கள் முழுநேர வேலை என ஆரம்பிக்கப்பட்ட பக்கம் தான் கொக்கிகுமாரு. இந்த பேரு மட்டும் தான் தனுஷோடது, ஆனால் பேஜ் அட்மின் அனைவரும் தீவிர அஜித் வெறியர்கள். நீண்ட நாட்களாகவே இந்த கொக்கி குமாரை விஜய், சூர்யா இருவர் ரசிகர்களும் சேர்ந்தால் கூட சமாளிக்க முடியாமால் இருந்து வந்தனர். இது விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, விஜய்க்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி வந்தது. புலி படம் இணையத்தில் மிகமோசமாக விமர்சிக்க பட்டதில் முக்கிய பங்கு இந்த கொக்கிகுமாருக்கு உள்ளது. 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்ற இந்த பக்கத்தை நேற்று முதல் காணவில்லை. நடிகர் விஜய் ரகசிய நடவடிக்கை எடுத்து இந்த பக்கத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க செய்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. சைபர்கிரைம் அலுவலகம் முதல் பேஸ்புக் அலுவலகம் வரை கம்ப்ளைன்ட்கள் பறக்க பதறிய பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்கிவிட்டது. நேற்று இந்த பக்கம் நீங்கியதுமே விஜய் ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். அவர்கள் சந்தோசம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு கொக்கிகுமாரு மின்னல் வேகத்தில் முளைத்து விட்டான். இன்று காலை புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கொக்கி குமாரு என்ற புதிய பக்கத்தை 5 மணி நேரத்தில் 70000 பேருக்கும் மேல் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இதுவரை 82000 மேற்பட்ட லைக்குகளை தாண்டி உள்ளது. இது ரசிகர்களை மட்டும் அல்ல விஜய்யையும் அதிரவைத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் என்ன தான் தலைகீழாக நின்றாலும், இவர்களை போன்றவர்களை அடக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம்.
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.