
மேலும் யூடியூப் இணையதள வரலாற்றில், வெளியான முதல் ஒருமணி நேரத்தில் 34,000 லைக்குகள் பெற்று சாதனை பெற்ற Taylor Shift's Bad Blood என்ற வீடியோ செய்த சாதனையை அஜீத்தின் வேதாளம் டீசர் முறியடித்துள்ளது. வேதாளம்' டீசர் ஒரு மணி நேரத்தில் 50,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை ஆறு மணி நேரத்தில் 5 லட்சத்தை நெருங்கிவிட்டது. எனவே இன்னும் பல புதிய சாதனைகளை 'வேதாளம்' படத்தின் டீசர் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலி படத்தின் டீசர் இன்று வரை பெற்ற லைக்ஸ்களை வேதாளம் டீசர் ஒரே நாளில் பெற்றதால் விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர் இதனால் தங்களால் முடிந்த வரை dislikes களை வழங்கி வருகின்றனர்.