விஜய் நடித்த 'புலி' படத்தின் ரிசல்ட் நெகட்டிவ் ஆக வந்ததால் இரண்டாவது நாளிலேயே படத்திற்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கேரளாவில் இரண்டாவது நாளான நேற்று முதல் நாளின் வசூலைவிட 50% குறைந்துவிட்டதாகவும், இரண்டாவது நாளில் வெறும் ரூ.85 லட்சங்கள் மட்டுமே வசூல் ஆனதாகவும் கூறப்படுகிறது. விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படும் கேரளாவில் 'புலி' திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.2.60 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெங்களூரிலும் இந்த படத்தின் வசூல் இரண்டாவது நாளில் வெகுவாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ரிலீஸான அக்டோபர் 1ஆம் தேதி பெங்களூரில் முதல் இடத்தில் இருந்த 'புலி' வசூல் இரண்டாவது நாளில் 48% குறைந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது நாளிலேயே வசூல் பாதியாக குறைந்துள்ளதால் 'புலி' படக்குழுவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.