தெலுங்கு , தமிழ் , ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சக்கைபோடு போட்ட படம் பாகுபலி. இப்படத்தின்அடுத்த பாகம் 2016 ம் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள், பாகுபலி அடுத்தடுத்த பாகம் வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தை நன்கு அறிந்த ராஜமௌலி நேற்று பாகுபலி மூன்றாம் பாகம் பற்றி ஒரு செய்தியை அறிவித்தார்.
'அதாவது
இந்த வருடம் இறுதிக்குள் பாகுபலி 2 ம் பாகம் வெளிவந்துவிடும், மேலும்
நீங்கள் ஆசைபடும் வகையில் 3ம் பாகம் எடுக்கும் எண்ணத்திலும் இருக்கிறேன்.
ஆனால் பாகுபலியின் கதை இரண்டாம் பாகத்துடன்
முடிந்துவிடும். மூன்றாம் பாகம் வேறு ஒரு கதையில் பிரம்மாண்டத்தின்
பிரம்மாண்டமாக காட்டபோகிறேன், நேரம் வரும் போது நானே சொல்கிறேன்
இப்போதைக்கு கதை எழுதும் பணியில் உள்ளேன் என்றார்.